நன்கு தலை முடி வளர என்ன செய்யலாம்....

  • 8வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை காட்டுவது நல்லது. இதனால் மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும் அழுக்கும் வெளியேறி,முடிக்கு வேண்டிய பலம் கிடைக்கும்.
  • வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி முடிந்து வைக்க வேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ப "ஸ்கார்ப்" அல்லது தொப்பி அணிவது கூந்தலின் பாதுகாப்பிற்கு மேலும் நல்லது.



  • பணி செய்யும் இடத்தில் ஏற்படக்கூடிய_தூசி, துகள்கள், காற்று மாசு, போன்றவை ஏற்படின்.. தலைக்கு பயன்படுத்தக்கூடிய_ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே, ஹேர் ஆயில், போன்றவை தவிர்ப்பது நல்லது. அல்லது அவைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
  • அடிக்கடி வெயிலில் செல்லக்கூடியவர்கள் கூந்தலில் ஹேர் சன் ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது நல்ல பலன் அளிக்கும்.
  • முடிகள் நனைந்திருந்தாலும் அதிக எண்ணெய் தன்மையுடன் இருந்தாலும், முடிகளில் அழுக்கு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு- நினைவில் கொள்க.
  • சுற்றுப்புற சூழல் மாசுபாட்டினால் முடி உலர்ந்து விடும். அப்போது வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதும் நல்லது.
  • தலை முடிக்கு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. அதோடு
  •  கூடுமானவரை நமது இயற்கை பாரம்பரியபடி.. சீயக்காய், காய்ந்த எலுமிச்சம்பழ தொலி, வெந்தயம், பூந்திக்கொட்டை, பாசிப்பருப்புமாவு, கடலை மாவு, போன்றவை பயன்படுத்தவதே மிக பாதுகாப்பானது. முடி வளர்வதற்கு நன்றும் கூட.....

Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் எடையை குறைக்க எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும்

சமந்தாவுக்கு காதலிக்க முன் ஸ்ருதியை திருமணம் செய்ய விருப்பட்டாரா நாக சைதன்யா?